நாடு முழுவதும் சிறப்புப் பாதுகாப்பு
Share
நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்புப் பாதுகாப்புத் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும்போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.
இன்று முதல் தேர்தல் கடமைகள் முடியும் வரை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சோதனைச் சாவடிகள் நாடு முழுவதும் இருக்கும் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
2020 பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை புதன்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.
அத்தோடு வாக்குகள் எண்ணும் மத்திய நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்து வரப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை தொடக்கம் வாக்குகளை எண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.