தமிழர்களின் ஏக பிரதிநிதி கூட்டமைப்பினர் அல்லர்
Share
மாற்று வியூகத்தால் தமிழர்களை வென்று பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளோம். தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அல்லர்.
எனவே அவர்களுடன் எவ்வித பேச்சுக்கும் தயாரில்லை என பசில் ராஜபக் தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்று முன்தினம் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தலின்போது யாழ்ப்பாணத்தில் கிடைத்த வாக்குகளை அடிப்படையாகக் கொண்டால் பொதுத் தேர்தலில் எமக்கு ஒரு ஆசனம் கூட கிடைத்திருக்காது என்றே வியூகம் வகுக்கப்பட்டது.
மாற்றுவழி குறித்து மதிநுட்பத்துடன் சிந்தித்தோம். இதன்படி சுதந்திரக் கட்சியில் இருந்து அங்கஜனும் ஈ.பி.டி.பியில் இருந்து டக்ளஸ் தேவானந்தாவும் தெரிவாகியுள்ளனர். ஆகவே எமக்கு இரு ஆசனங்கள் கிடைத்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல. அவர்களுடன் எந்தவிதமான பேச்சுக்கும் நாம் தயாரில்லை. அவர்களின் எந்த நிபந்தனை யையும் நாம் ஏற்க மாட்டோம் என்றார்.