தந்தையின் கத்திவெட்டில் 5 வயது சிறுமி படுகாயம்
Share
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாப்புலவு பகுதியில் நேற்று முன்தினம் குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றினை தொடர்ந்து தனது 5 வயதுச் சிறுமி மீது சரமாரியாக கத்தியால் வெட்டிய சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தினை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையான 28 வயதுடைய நபரை முள்ளியவளை பொலிஸார் கைது செய்து இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.