சீனியின் விலை திடீர் அதிகரிப்பு
Share
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிலோ சீனியின் விலை 150 ரூபாயைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிகச் சிறிய காலப் பகுதியினுள் சீனியின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக குறிப் பிடப்படுகின்றது.
சீனி விலையை 100 ரூபாயாக நிர்ணயிக்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும் சீனியின் விலை திடீரென 150 ரூபாயாக அதிகரித்துள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
சீனி விலை அதிகரித்தமை தொடர்பில், உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு எவ்வித காரணத்தையும் இதுவரையில் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் யாழில் சீனியின் விலை 135 ரூபாயிற்கே விற்கப்படுவதாக யாழ்ப்பாண வர்த்தகர்கள் நேற்றுத் தெரிவித்திருந்தனர்.