கொழும்பு மருதானையில் கர்பிணிக்கு கொரோனா
Share
இலங்கையில் 415ஆவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியான பெண் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த பெண் கொழும்பு மருதானை பகுதியை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பிறந்த குழந்தை நேற்றுக் காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 417 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 109 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.