கொரோனாவால் குற்றவாளிகளுக்கு கிடைத்தது விடுதலை – சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்
Share
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்காமல் நாட்டில் கொரோனா பரவும் அபாயத்தை பயன்படுத்தி கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வது கண்டனத்திற்குரியது என சர் வதேச மன்னிப்புச் சபை தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்கு பதிலளிக்கும் கடப்பாடு மிகவும் குறைவானதாக காணப்படும் நிலை யில் மிருசுவில் படுகொலை வழக் கில் தண்டனை விதிக்கப்பட்ட சார்ஜன்ட் ரத்னாயக்காவை விடு தலை செய்வது என இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தன்னிச் சையான தீர்மானம் மிகவும் கவலை அளிக்கும் செய்தியைதெரிவித்துள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னா சியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
பயங்கரமான குற்றங்களை இழைத்த படைவீரர்கள், நீதிமன் றத்தினால் தண்டனை விதிக்கப் பட்டாலும் மன்னி;ப்பளித்து விடு தலை செய்யப்படு வார்கள் என்ற கவலை தரும் செய்தியை இந்த விடுதலை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் வேளையில் வழங்கிய இந்த விட யத்துடன் தொடர்புடைய ஏனைய வாக்குறுதிகள் குறித்தும் சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளி யிட்டுள்ளது.
பாரிய நோய் தொற்று அபா யத்தை பயன்படுத்;தி பாரதூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வது கண்டிக்கதக்க விடயம் எனவும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னா சியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.