கொரோனாவை முற்றாக கட்டுப் படுத்திய பின்பே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்
Share
நாட்டில் கொரோனா வைரஸ் முற்றாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் உள்ள 582 பாடசாலைகளில் கை கழுவுவதற்குக் கூட தண்ணீர் வசதி இல்லை என்றும் அவர் கூறினார்.
அத்துடன் 800க்கும் அதிகமான பாடசாலைகளில் முறையான கழிவறைகள் இல்லை என வும் குறிப்பிட்ட அவர், இந்நிலையில் பாடசாலைகளை ஆரம்பிப்பது கடினம் என்றும் இவற்றை ஆராய உத்தரவிட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.