Type to search

Headlines

கொரோனாவிலிருந்து குணமடைந்த அரியாலையைச் சேர்ந்த நால்வர் நேற்று வீடு திரும்பினர்

Share

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிப்பிலிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு, முழுமையாகக் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.

ஆண்கள் இருவரும் பெண்கள் இருவருமே இவ்வாறு முழுமையாகச் சுகமடைந்த நிலையில் வெலிகந்தை வைத்தியசாலையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அம்புலன்ஸில் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டு அவர்களின் வீடுகளில் இறக்கிவிடப்பட்டனர்.

அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த ஒருவரும் முள்ளியைச் சேர்ந்த மூவருமே இவ்வாறு முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் வீடுகளுக்கு திரும்பினாலும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு வீட்டிலேயே இருப்பார்கள் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link