கொரோனாவால் நேற்றும் ஒரு மரணம்
Share
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கொழும்பு ஐனுர் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 64 வயது டையவர் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபர் இவராவார்.
மேலும் 6 பேர் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸால் உயிரிழந்த நீர் கொழும்பு வாசி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
நீர்கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த 64 வயதுடையவர் தனியார் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியதால் நீர் கொழும்பு வைத்தியசாலைக்கு நேற்று மாற்றப்பட்டார்.
அவர் இருதய நோயாளி என்பதுடன் சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் என்று சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் உயிரிழந்த நோயாளியின் விவரங்களை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சேகரித்துள்ளது.
“உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். எனினும் அவர் நீண்டகாலமாக நீர்கொழும்பு கொச்சிக்கடையில் வசித்து வந்தார். அத்துடன், அவர் கடந்த மார்ச் 11ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து திரும்பியுள்ளார்.
அவரது மகன்கள் இருவரும் வியாபார நோக்கங்களுக்காக கடந்த பெப்ரவரியில் இந்தியா சென்று நாடு திரும்பியுள்ளனர்.
உயிரிழந்த நோயாளி நீர்கொழும்பு நவலோகா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படாமலேயே நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு நேற்று மாற்றப்பட்டுள்ளார்.
எனினும் அவரது உடல்நிலை கவலைக் கிடமாக இருந்ததால் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்தார்.
அவரது மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப் படுத்தப்பட்டது” என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு கொரோனா தொற்று இருந்த மையால் நீர்கொழும்பு பொது வைத்திய சாலையில் பணியாற்றும் 50 மருத்துவ சேவையாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட் படுத்தப்பட்டுள்ளனர்.