கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம் எரியூட்டப்பட்டது
Share
கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் முதலாவதாக உயிரிழந்த நபரின் உடல் நேற்று அரச செலவில் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று முன்தினம் மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய தர்மசிறி ஜனானந்த என்பவர் உயிரிழந்திருந்தார்.
குறித்த நபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படமாட்டாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் நேற் றைய தினம் கொட்டிகாவத்த மின்சார மயா னத்தில் கடுமையான பாதுகாப்பின் மத்தியில் சர்வதேச சுகாதார விபரக் குறிப்புக்களின் கீழ் தகனம் செய்யப்பட்டது.