குடும்பப் பெண் மீது மீசாலையில் வாள்வெட்டு
Share
மீசாலை வடக்குப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குழு ஒன்று குடும்பப் பெண் மீது சரமாரியாக வாள்வீச்சு மேற் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதில் மீசாலை வடக்கு, மீசாலையைச் சேர்ந்த 40 வயதான பவானி என்ற பெண் கை மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.