காணாமலாக்கப்பட்ட சகல குடும் பத்தினரின் உரிமைகளையும் ஐ.நா மதிக்கின்றது
Share
காணாமலாக்கப்பட்ட சகல தரப்பினரதும் குடும்பத்தினரின் உரிமைகளை ஐக்கிய நாடுகள் சபை மதிப்பதாக இலங்கையிலுள்ள ஐ.நா சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்ட தினமான நேற்றைய தினம் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காணாமலாக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்து அவர்களது குடும்பத்தவர்கள் மற்றும் உறவினர்கள் எதுவும் உறுதியான தகவல் எதுவுமின்றி நம்பிக்கைக்கும் விரக்திக்குமிடையில் பல வருடங்களாக காத்திருக்கின்ற நிலையில் காணாமலாக் கப்பட்டோர் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பாதிப்படைந்தவர்களின் நிலைமையினைக் கவனத்திற் கொண்டு அவர்களின் துன்பத்தை நீக்குவதற்கான உறுதியான பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் பாதிப்படைந்தோரில் பெண்களே அதிகமாக உள்ளதனால் அவர்களின் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்குவதுடன் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சம்பவம் தொடர்பான சாட்சிகள் மற்றும் சட்டவாதிகள் ஆகியோரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது அவசியமாகும்.
இந்நிலையில், சர்வதேச காணாமலாக் கப்பட்டோர் தினத்தில் பாதிப்படைந்தவர்கள் மற்றும் எதிர்பார்ப்புடன் உள்ளவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் தனது அறிக்கையின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.