Type to search

Headlines

கட்டுப்பாடுகளை தளர்த்திய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு

Share

கொரோனா வைரஸ் ஆபத்து காரணமாக கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்த நாடுகள் அந்த கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர் வைரஸ் தொற்றியவர்கள் அடையாளம் காணப்படுவது அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறான ஆபத்து அதிகரித்துள்ள நாடுகளாக சீனா, தென் கொரியா மற்றும் ஜேர்மனி
ஆகிய நாடுகள் கடந்த வாரம் அடையாளப்படுத்தப்பட்டன.

கடும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் வழமையாக நடவடிக்கைகள் ஆரம்பிக்
கப்பட்டதை அடுத்து வார இறுதியில் வைரஸ் தொற்றாளர்கள் குறிப்பிடத்தக்கள வில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தென் கொரியாவில் மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் களியாட்ட விடுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அவற்றை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சீனாவின் வுஹான் நகரிலும் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நாடுகளில் மீண்டும் வைரஸ் பரவிய போதிலும் அதனை கட்டுப்படுத்த அந்நாடுகள் நடவடிக்கை எடுத்தமை குறித்து உலக சுகாதார அமைப்பு மகிழ்ச்சியை வெளியிட் டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link