கசிப்புடன் தருமபுரத்தில் இருவர் கைது
Share
தருமபுரம் பகுதியில் 10 லீற்றர் கசிப்பினை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் குடும்பப் பெண் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் புளியம்பொக்கணைப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 520 லீற்றர் கோடாவும் ஒர் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டது
இவர்கள் இருவரும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என தருமபுர பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சிசெர தெரிவித்தார்.