Type to search

Headlines

ஒரு நபரிலிருந்து மற்றொருவருக்கு எளிதில் தொற்றுகின்ற அபாயம்

Share

நாட்டில் அண்மைய நாட்களில் பரவி வரும் கொரோனா வைரஸ் ஒரு நபரிலிருந்து மற்றொருவருக்கு எளிதில் தொற்றுகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸைப் பற்றி ஆராய்ந்து வரும் மருத்துவ வல்லுநர்கள், தற்போது பரவிவரும் வைரஸின் தீவிரம் மிக அதிகமாக இருப்பதாகவும், அது வேகமாகவும் எளிதாகவும் பரவக்கூடுமெனக் கண்டறியந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர், மருத்துவர் ஜெயருவன் பண்டார தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எனவே, வைரஸ் பரவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவின் பணிப்பாளர் மருத்துவர், பாலிதா கருணபிரேம, நாட்டில் கோவிட் – 19 நோய்க்கு சிகிச்சை வழங்கும் திறனில் 70 சதவீதம் இப்போது நோயாளிகள் நிறைந்ததாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link