எரிபொருட்களின் இறக்குமதி இலங்கையால் இடைநிறுத்தம்
Share
எரிபொருட்களை இறக்குமதி செய்வதனை இலங்கை அரசாங்கம் இடைநிறுத்திக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக தற்பொழுது கையிருப் பில் உள்ள எரிபொருட்கள் பயன்படுத்தப்படு வதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு மாத காலத்திற்கு எரிபொருட்கள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன களஞ்சிய நிறுவனத்தின் தலைவர் உவைஸ்
மொஹமட் தெரிவித்துள்ளார்.
நாள் தோறும் எரிபொருள் பயன்பாடு காரணமாக ஏற்கனவே எரிபொருள் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பின்னர், எரிபொருளுக்கு கிராக்கி இல்லாத காரணத்தினால் எரி பொருள் கொள்வனவு இடை நிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் எரிபொருள் பயன்பாடு 40 முதல் 50 வீதம் வரையில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.