எங்கோ இருந்தவர்கள் வந்து மக்களுக்கு சலுகைகளைக் கொடுத்து வென்றுள்ளனர்
Share
சலுகையா? உரிமையா? என்ற போராட்டத்தில் இப்பொழுது நாம் சலுகைக்கு இடமளித்து விட் டோம். எங்கோ இருந்தவர்கள் வந்து இரவிரவாக மக்களுக்கு சலுகைகளைக் கொடு த்து இன்று மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
ஆகவே, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினர் இனிவரும் காலங்களில் மக்களின் எழுச்சிக்காக, புரட்சிக்காக பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்”
இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்காக தேர்தல் காலங்களில் உழைத்த நண்பர்கள், நலன் விரும்பிகள், தொண்டர்கள் அனைவரையும் கௌரவிக்கும் முகமாக நடைபெற்று முடிந்த தேர்தலில் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்றைய தினம் சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சுரேஷ் பிறேமச்சந்திரன், முன்னாள் வட மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன், சி.சிவகுமார் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் விக்னேஸ்வரன் தெரிவித்ததாவது,
வெகு விரைவிலே இந்த நாட்டிலே சர்வாதிகாரம் திளைக்கப் போகிறது. அதற்குரிய சகலவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்குரிய அத்திபாரம் இடப்பட்டு விட்டது. ஆனாலும் எமது உரிமைகளை நாம் கேட்டே தீருவோம்.
ஆனால் சிலர் நினைக்கிறார்கள் அதிகார பலம் அவர்களிடம் சென்றதன் பின்னர் கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு நாங்கள் வாயை மூடிக் கொண்டு இருந்தால் என்ன என்று நினைக்கின்றார்கள்.
சலுகையா? உரிமையா? என்ற போராட் டத்தில் இப்போது நாம் சலுகைகளுக்கு இடமளித்து விட்டோம்.
எங்கோ இருந்த வர்கள் வந்து இரவிரவாக மக்களுக்கு சலுகைகளைக் கொடுத்து இன்று மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
ஆகவே கட்சி யின் வெற்றிக்காக உழைத்த அனைவரும் இனிவரும் காலங்களில் மக் களின் எழுச்சிக்காக, புரட்சிக்காக பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.