Type to search

Headlines

இளம் தமிழ் செயற்பாட்டாளர்கள் கடத்தி வன்புணர்வு செய்யப்பட்டு ள்ளனர்

Share

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான உண்மையைக் கண்டுபிடிப்பதற்கான தேடலில் ஈடுபட்ட இளம் தமிழ் செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள் எனும் அதிர்ச்சித் தகவலை ஜஸ்மின் சூக்காவின் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவ்வாறு சித்திரவதைக்குட்பட்டு பாதிக் கப்பட்டவர்களில் குறைந்தது 15 பேருக்கு கடந்த 2015இலிருந்து இங்கிலாந்தில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா மேலும் தெரிவிக்கையில்,
போர் முடிவடைந்த பின்னர் ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக போரில் தமது உடன் பிறப்புக்கள் காணாமற்போன தமிழ் இளைஞர்கள் உண்மையைக் கேட்டதற்காக ஒரு பயங்கரமான விலையைக் கொடுத்திருக்கின்றார்கள்”

தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை மட்டும் அறிய விரும்பியவர்கள் மீது இலங்கை அரசானது வெள்ளை வானை அனுப்பி துன்புறுத்துவதை தொடர முடியாது என காணாமற் போனவர்களுக்கான இந்த சர்வதேச நாளில் நாம் இலங்கை அரசாங்கத்திற்கு நினைவுபடுத்துகின்றோம்.

“தமக்கு உரித்துடைய நீதியைக் கேட்கும் செயல்முறையில் இந்தக் குடும்பங்கள் பல தடவைகள் பலியாக்கப்பட்டுள்ளார்கள். உண்மையைக் கண்டறிவதில்; அக்கறை எதுவுமே கொண்டிராத ஒரு அரசாங்கமே இதற்கான முழுப் பொறுப்பையும் கொண் டுள்ளது.

“குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ஆட்கள் காணாமற் போனமையும் அத்துடன் ஒரு தசாப்த காலம் கடந்து விட்ட பின்னரும் இராணு வத்திலுள்ள எவரும் விசாரணைக்குக் கூட உட்படுத்தப்படவில்லை என்பதும் கேலிக்குரியதொன்றாகும்”

“இடைநிலை நீதிச் செயற்பாடு ஒன்று இருப்பதாக எண்ணும் சர்வதேச சமூக மானது நீதியைக் கோரும் குடும்பங்களுக்கான ஒரு தார்மீகப் பொறுப்பை தற்போது கொண்டுள்ளது.

புதிய அரசாங்கத்திற்கான தமது ஆதரவினை வெளிப்படுத்துவதற்காக அரசியல் வாதிகளுடனும் ஜெனரல்களுடனும் கை குலுக்குவதற்கு வரிசையில் நிற்பதற்குப் பதிலாக கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் உண்மைக்காக காணாமற்போனவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களது துணிச்சலான சட்டவாளர்களது தாகத்தினை பாதுகாப்பதற்கும் தமது தொடர்ச்சியான ஆதரவினை வெளிக்காட்டவும் அவர்களுடன் நின்று படம் எடுத்துக் கொள்ள வேண்டும்”

காணாமற்போனவர்களின் குடும்பங்கள் அனுபவித்துவரும் முடிவில்லாத துன்பங்களை கடுமையான மற்றும் அவ மரியாதையான முறையில் நிராகரித்து அவர்களை இழிவுபடுத்தும் ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட்டமைக்கான இந்த அமைச்சர் விளக்கமளிக்க அழைக்கப்படுவது அவசியமாகும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link