இலங்கையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல்
Share
இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான கைதியு டன் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த வர்களுக்கே நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மாரவில பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறினார்.
வெலிக்கடை கைதியுடன் மூன்று மாதங்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தங்கியிருந்தவர்கள் மற்றும் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அடங்க லாக 450 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அங்கு மேற்கொள்ளக்கூடிய பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெ டுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,151 ஆக அதிகரித்துள்ளது.