இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் தமிழ் மக்களே என்று கூறியதற்காக சி.ஐ.டி விசாரணை
Share
வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனிடம் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் (சிஐடி) வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சிறப்பு பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளே அவரிடம் இந்த வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர்
மேலும் இது தொடர்பில் தெரிய வருவதாவது,
இலங்கையின் பூர்வ குடிகள் தமிழ் மக்களே என கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகளை பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவு முன்னெடுத்துள்ளது.
யாழ்.நல்லூர் கோவில் வீதியில் உள்ள அவரது வாசஸ்தலத்தில் வைத்தே இந்த விசாரணை இடம்பெறுள்ளது.
மாலை 4.00 மணியளவில் ஆரம்பமான விசாரணைகள் நீண்ட நேரம் தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுத் தேர்தலுக்கு முன்னரும் சி.ஐ.டி.யினர் இதேபோன்ற விசாரணை ஒன்றை விக்கினேஸ்வரனிடம் நடத்தியிருந்தார்கள்.
தமிழ் மக்கள்தான் இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் என்ற கருத்தில் அவர் நிகழ்த்திய உரை ஒன்று தொடர்பாகவே இந்த விசாரணை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது,