Type to search

Headlines

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த வர்களுக்கு கிளிநொச்சியில் நினைவாலயம்

Share

நாட்டில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இறந்த மக்களுக்கான நினைவுத் தூபி அடங்கிய நினைவாலயம் ஒன்றினை அமைப்பதற்கு கரைச்சி பிரதேச சபையில் நேற்று இடம்பெற்ற அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தில் நினைவாலயம் கிளிநொச்சி நகரப்பகுதியில் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள பசுமைப் பூங்காவில் அமைப்பதற்காகவும் இதன் பூர்வாங்கப் பணிகள் எதிர்வரும் மே 18 ஆம் திகதி ஆரம்பித்து அடுத்த வருடம் மே 18 ஆம் திகதி திறந்து வைப்பதற்கு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

இக் கட்டுமானப் பணிக்கு முதல் கட்டமாக தனது சொந்த நிதியில் இருந்து கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான ஜீவராஜா ஐந்து லட்சம் ரூபாய் காசோலையினையும், ரஜனிகாந்த் ஒருலட்சம் ரூபாய் காசோலையினையும் நேற்று தவிசாளரிடம் வழங்கியுள்ளனர்

அதனை விட ஏனைய உறுப்பினர்களும் தமது மாத சம்பளத்தை வழங்குவதாக தெரிவித் துள்ளனர்.

குறித்த நினைவுத் தூபியின் அமைப்பு மொத்த செலவு போன்ற விடயங்கள இன்று கரைச்சி பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் தவிசாளர் வேழமாலிதன் தலைமையில் ஆராயப்படவுள்ளது மேலும் குறித்த அமர்வில் இறுதி யுத்தத்தில் இறந்த மக்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link