ஆண், பெண் இருவர் சடலங்களாக மீட்பு
Share
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பரந்தன் ஓவசியர் சந்திப் பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரதும் பெண் ஒருவரதும் சடலங்களை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கடந்த 04ஆம் திகதி முதல் காணாமல் போன நிலையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்த பரந்தன் பகுதியில் வசிப்பவரும் யாழ்ப்பாணம் மின்சார சபையில் கடமையாற்றி வந்த சுசிதரன் (வயது – 28) மற்றும் கிளிநொச்சி இரத்தினபுரத்தில் வசித்து வந்த நிலையில் தற்போது பட்டதாரி நியமனம் கிடைக கப்பட்டு கரைச்சிப் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த தனுசியா (வயது – 27) ஆகிய இருவரினதும் சடலங்களே மீட்கப்பட்டுள்ளது.
சடலங்களை மீட்ட கிளிநொச்சி பொலிஸார் பிரேத பரிசோதனைகளுக்காக கிளி நொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தற்கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதாவது சதி நடவடிக்கைகளால் உயிரிழந்தனரா? என விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்த இருவரும் காதலித்து வந்ததாகவும் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாக பொலிஸார் நடத்திய ஆரம்ப விசாரணையில் அவர்களது நண்பர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.