அம்பன் சூறாவளி வடக்கையும் தாக்கும் சாத்தியம்
Share
அம்பன் சூறாவளி வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
பாரிய சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து (2020 மே 18ஆம் திகதி) அதி காலை 2.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 740 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 12.90 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 86.90 இற்கும் இடையில் தென்வங்காள விரிகுடா மத்திய பகுதி கடற்பரப்புகளுக்கும் அண்மையாகவுள்ள கடற்பரப்பு களுக்கும் மேலாக மையம் கொண்டுள்ளது.
இது அடுத்த 6 மணித்தியாலங்களில் ஒரு மிகப் பாரிய சூறாவளி யாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இது நாளை 20ஆம் திகதியள வில் வடக்கு – வடகிழக்கு திசையில் மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.