அமைக்கப்படவிருந்த கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்துக்கான ஏற்பாடுகள் இடைநிறுத்தம்
Share
போதியளவு சுகாதார ஏற்பாடுகள் இல்லாததால் யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் இராணுவத்தால் அமைக்கப்பட விருந்த கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்துக்கான ஏற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தை அமைப்பதற்காக நேற்று முன்தினம் தேசிய கல்வியியற் கல்லூரியில் இரு விடுதிகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் விடுமுறையில் சென்றிருந்த இராணுவத்தினர், நேற்றுக் காலை குறித்த பகுதிக்கு தனிமைப்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டிருந்தனர்.
பின்னர் அவர்கள் கோப்பாய் இராணுவ முகாமுக்குள் மீள கொண்டு செல்லப்பட்டனர்.
சுகாதார ஏற்பாடுகள் போதிய அளவு இல்லாத நிலையில் அங்கு தனிமைப்படுத்து வதற்கான ஏற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது.
இதேவேளை குறித்த பகுதியில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டிருந்ததுடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.