வேகக்கட்டுப்பாட்டையிழந்த மோ.சைக்கிள் கிளிநொச்சியில் விபத்து
Share

வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள், வேலி கம்பித் தூணுடன் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் கிளிநொச்சி வின்சன் வீதி 3ஆம் கட்டை பகுதியில் நேற்று நண்பகல் இடம் பெற்றுள்ளது.
இதில் அதே இடத்தினை சேர்ந்த சுந்தரம் மகேந்திரம் (வயது 45) என்பவரே உயிரிழந்தவராவார்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.