வீட்டுக்குள் சுரங்கம் வெட்டி கசிப்பு உற்பத்தி
Share

வீட்டுக்குள் சுரங்கம் வெட்டி சட்டத்துக்குப் புறம்பான கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு, அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று கோப்பாய்ப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஊரெழு பகுதியில் இந்த கசிப்பு உற்பத்தி நடவடிக்கை பொலிஸாரால் முறியடிக்கப் பட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்த கசிப்பு உற்பத்தி இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மிகவும் நூதனமான முறையில் வீட்டுக்குள்ளேயே கிடங்கு வெட்டி, அதற்குள் கசிப்பு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுரங்கத்திலிருந்து 12 போத்தல் கசிப்பு பொலிஸாரால் மீட்கப் பட்டுள்ளது. சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை கோப்பாய் ராச வீதிப் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து 6 போத்தல் கசிப்பு 29 போத்தல் கோடாவும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 54 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக கோப்பாய் பொலிஸ் பிரிவில் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தியுடன் தொடர்புடைய கைதுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.