வாரத்தில் 7 நாட்களும் பாடசாலை இயங்கும்
Share

கொரோனா தொற்று நோய்க்குப் பின்னர் கல்வியில் இழந்த வாய்ப்புகளைப் பிடிக்க வாரத் தின் ஏழு நாட்களும் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
சிறிய குழுக்களாக வகுப்புகள் நடத்தப்படும் என்பதால் ஏழு நாட்களும் ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் சுழற்சி முறையில் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
“ஒவ்வொரு ஆசிரியரும் மாணவரும் வாரத்தில் நான்கு நாட்;கள் மட்டுமே பாட சாலைக்குச் சென்றால் போதும். பாடத்திட்டங்களை முடிப்பதற்கான இறுதி இலக்கைக் கொண்டு வகுப்புகளில் கற்பித்தல் ஒரு முன்திட்டமிடப்பட்ட பொறிமுறையில் ஏற்பாடு செய்ய முடியும் என்றால் அது போதுமானது என்று நாங்கள் சிந்தித்து வருகின்றோம்.
புதிய திட்டமிடலில், அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைத் தடுக்க 30க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட ஒரு வகுப்பை குறைந்தபட்சம் இரண்டு குழுக் களாக மட்டுப்படுத்த வேண்டும்” என்று அமைச்சர் அழகப்பெரும குறிப்பிட்டார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட சுமார் 868 பாடசாலைகளுக்கு புதிய பொறிமுறையைத் தழுவுவது எளிதல்ல, ஆனால் நாங்கள் அதைச் செய்ய வேண்டும்.
ஏனென்றால் கிட்டத்தட்ட 4.5 மில்லியன் மாணவர்கள் மற்றும் சுமார் 3 லட்சம் ஆசிரியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி தான் எங்கள் முன்னுரிமை என்று அமைச் சர் அழகப்பெரும சுட்டிக்காட்டினார்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டதன் மூலம் நாடு இயல்புநிலைக்கு வந்தபின், பாடசாலைகள் முறையாக திறக்கப்படுவதற்கு முன்பு, 10 ஆயிரத்து 194 பாட சாலைகளுக்கும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் வருதை தர வேண்டும்.
பாடசாலைகளைத் திறக்க முதற்கட்ட ஏற்பாடுகளைச் செய்வதற்கு முன்பு கிருமி நீக்கம் செய்யப்படும். பாடசாலைகள் முழுமையாக பாதுகாப்பாகவும், கல்வி நடவடிக்கைகளைத் தொடங்கவும் தயாரான பின்னர், க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும், பின்னர் க.பொ.த. சாதாரணதர மாணவர்களுக்கும், இறுதியாக ஆரம்பப் பிரிவுக்கும் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படும்.
பாடசாலை வளாகத்தில் மாணவர்கள் அதிக அளவில் ஒன்றிணைவதைத் தடுக்க இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு வெவ்வேறு நேரங்களில் பாடசாலை இடைவேளைகள் சுழற்சி அடிப்படையில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அழகப் பெரும தெரிவித்தார்.
மார்ச் 20 முதல் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக மொத்தம் 276 பாட சாலை மணித்தியாலங்கள் இழக்கப்பட்டுள்ளன.
மேலும் முடிவடையாத பாடத்திட்டங்களை எவ்வாறு முடிப்பது என்பது குறித்த பிரச்சினைக்கு தாம் விரைவில் தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.