பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள்
Share

கொரோனாத் தொற்றுக் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதால், பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சமைத்த போசாக்கு உணவுக்குப் பதிலாக உலர் உணவுப் பொதிகளை பெற்றோர்களிடம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ் ஏற்பாடு மே மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.
இதன்பிரகாரம் ஒவ்வொருமாண வருக்கும் 10 முட்டை, ஒரு கிலோ நூடில்ஸ், ஒரு கிலோ சத்துமா அடங்கிய பொதிகள் வழங்கப்படவுள்ளன.
இவ் உலர் உணவுப் பொதிகளின் விநியோகத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சதொச என்பன ஈடுபடவுள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.