எதிர்வரும் சில நாட்கள் இலங்கைக்கு அபாயகரமானவை
Share

எதிர்வரும் சில நாட்கள் இலங்கைக்கு அபாயகரமானவை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிரிக்கும் பட்சத்தில் நாட்டின் நிலைமை வழமைக்கு திரும்புவது கடினமானதாக அமையும் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா சோதனை நடவடிக்கை களை அதிகரித்தால் மாத்திரமே இதற்கான தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், மக்கள் அவதானத்துடன் செயற்படுவது மிகவும் முக்கியமானது எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.