ஏ.டி.எம் இயந்திரத்தில் வைக்கவிருந்த 30.5 மில்லியன் ரூபா கொள்ளை!
Share
ஹொரணை நகரிலுள்ள அரசு வங்கி ஒன்றின் ATM இயந்திரங்களில் வைப்பு செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்ட 3.05 கோடி ரூபாய் பணம் யாரோ ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (3) பிற்பகல் 2.55 மணியளவில், வங்கி ஊழியர் ஒருவர் வங்கியின் பின் கதவினால் தனது இரு கைகளிலும் இரண்டு பணப்பைகளை எடுத்துச் சென்ற போது, அங்கு வந்த நபர் ஒருவர் அந்த இரண்டு பணப்பைகளையும் பலவந்தமாகப் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.
பணத்தைக் கொள்ளையடித்த நபர் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், ஹொரணை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


