Type to search

Headlines News

பழங்கள், விதைகள் அதிகம் உண்டு. ஆரோக்கியம் பெறுவோம்.

Share

மனிதகுல விருத்தியின் ஆரம்ப காலத்திலே பழங்கள் மனிதனின் பிரதான உணவாக இருந்து வந்தது. பழங்கள் உண்பது ஆரோக் கியத்துக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் பழங்க ளின் மகிமையை அறிந்ததாலேயே முருகக்கடவுள்கூட பழம் சம்பந்தமான ஒரு பிரச்சினை காரணமாக கோபங்கொண்டு பழனிமலை வரை போனதாக சொல்லப்படுகிறது. இயற்கையன்னை எமக்க ளித்துள்ள ஏராளமான கொடை களில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிப்பது விதம்விதமான சுவை களையும் நிறங்களையும் கொண்ட பழங்கள் ஆகும்.

பழங்கள் நீரிழிவு உள்ளவர்களு க்கு நல்லதல்ல என்று கருதப்பட்ட காலம் நன்றாக இருந்தது. ஆனால் பழங்களை தினமும் உண்டு வந்தால் வகை 2 நீரிழிவு எனப்படும் நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைகிறது என்று ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.

சுமார் இரண்டு இலட்சம் பேரின் உணவுப் பழக்கம் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான 25 வருட தரவுகளை ஆராய்ந்து பார்த்த தில் இந்த முடிவு தெரிய வந்துள் ளது. அதே நேரம் பழச்சாறு குடிக் கும் வழக்கம் இருப்பவர்களுக்கு வகை 2 வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே பழங்களை பழச்சாறாக்கி உண்பதிலும் பார்க்க பழங்களாக உண்பது சிறந்தது எனக் கருதப்படுகிறது.

பழங்கள் ஒவ்வொன்றுக்கும் பற்பல சிறப்பியல்புகள் இருக்கின் றன. ஆனால் மருத்துவச் சிறப்பியல் புகள் அனைத்தையும் ஒருங்கே தன்னகத்தே கொண்ட ஒரு மருத் துவப் பழமாக ஜம்புப்பழமே விளங் குகின்றது.

சுவைமிக்க இந்தப்பழம் கலோரிப் பெறுமானம் குறைந்தது. நிறை அதிகரிப்பை ஏற்படுத்தமாட்டாது. நீரிழிவு நோயாளரில்கூட குருதி வெல்ல அளவை அதிகரிக்கமாட் டாது. அதிகளவு நீர்த்தன்மையும் நார்த்தன்மையையும் கொண்டது.

சத்துக்கள் நிறைந்தவை. பசியைப் போக்கும். குடிப்பதற்கான இயற்கை யான ஆரோக்கிய பானம் தயாரிப்ப தற்கு இது ஒரு சிறந்த பழமாகும்.

சிறுவர்களும் சுகதேகிகளும் சகல விதமான நோயாளர்களும் உண்ப தற்கு ஏற்ற ஒரு கனியாக இது விள ங்குகிறது. அத்துடன் இது குருதியில் கொலஸ்ரோலின் அளவைக் குறை ப்பதற்கு உதவுவதாகவும் நம்பப்ப டுகிறது.

மாம்பழங்கள் போன்ற இனிப்புச் சுவை கூடிய பழங்களை செம்பழ நிலையில் உண்பது சிறந்தது. அத்து டன் மாம்பழத்தைத் தோலுடன் உண்பதே நல்லது என்று சொல்லப் படுகிறது. ஏனெனில் தோலில்தான் அதிகளவு விற்றமின்சி காணப்ப டுகிறது.மேலும் கல்சியம், பொட்டாசி யம், சோடியம் மற்றும் பொஸ்பரசு இதில் அதிகளவு உள்ளன.

வாழைப்பழமானது எக்காலத்தி லும் கிடைக்கக்கூடிய முக்கனி. இது எமது பிரதேசத்தில் நன்கு விளைய க்கூடிய மலிவான, சுவையான பழமாகும். உண்ணக் கூடியதாகவும் இருக்கின்றது. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் இது ஏனைய பழங்க ளுக்குச் சற்றும் சளைத்ததல்ல என்ப தற்கு சான்று பகர்கின்றது. இரும்புச் சத்து அதிகமுள்ள மாதுளை இரத் தத்தின் அளவை அதிகரிக்க உதவு கிறது. அத்துடன் மாதுளம் பழங்க ளிலே பல எண்ணற்ற மருத்துவக் குணங்கள் இருப்பது ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டு வருகின்றன.

விதைகள், கொட்டைகள் என் பனவும் உடலில் பல அனுகூலமான விளைவுகளை ஏற்படுத்துவது அறி யப்பட்டு வருகிறது. எவ்வளவுக் கெவ்வளவு கொட்டைகளை சாப்பிடு கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிககாலம் வாழலாம் என்று  நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.

அமெரிக்காவில் 30 ஆண்டு கால கட்டத்தில் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவு கள் வந்துள்ளன. தினமும் ஒருகை யளவு கொட்டைகளை சாப்பிடுவதால் எந்த ஒரு காரணத்தாலும் ஏற்படும் இறப்பதை 20 சதவீதம் என்ற அளவில் குறைக்கிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது.

கச்சான், கடலை, கசுக்கொட்டை மாதுளம்விதை, பாதாம் பருப்பு, கௌப்பி, பயறு போன்றவை உடல் ஆரோக்கியத்தைப் பேண உறுது ணையாக இருக்கின்றன. பழங்கள் மிக வேகமாக சமிபாடடையக் கூடிய வையாதலினால் இவற்றைத் தனி யாக உண்பது நல்லது. பொதுவாக இரவில் ஏனைய உணவுகளைத் தவிர்த்து பழங்களை மட்டும் உட்கொள்வது சாலச்சிறந்தது.

கலப்படமற்ற இயற்கையின் இனிய வரங்களான பழங்கள், விதைகள் என்பவற்றை அதிகம் உண்டு ஆரோக்கியம் பெறுவோம். மேலைத்தேய நாடுகளில் இயற் கையான பொருட்களிற்கு மதிப்பு அதிகம்.

அவர்களுக்கு அவற்றைப் பெற் றுக் கொள்வது கடினமாக இருந்தும் அதிகவிலை கொடுத்து இயற்கை யான உணவுகளை வாங்க எத் தனை முயற்சிகளை எடுத்துக் கொண் டிருக்கிறார்கள். ஆனால் நாம் எம் மைச் சுற்றி மலிவான, இயற்கை யான பொருட்கள் எவ்வளவு இரு ந்தும் அதிக விலை கொடுத்து பொதி செய்யப்பட்ட பொருட்களை வாங்க ஆசைப்படுகின்றோம்.

ஒரு பொருளைப் பேணியிலோ அல்லது போத்தலிலோ பொதி செய்ய முன்பு அது பலவிதமான வெப்பநிலை மாற்றங்களுக்கும் உலர்த்துதல்களுக்கும் உட்படுத்தப் படுகின்றன. இதன்போது அதன் இயற்கையான மூலக்கூறுகளில் பல்வேறுபட்ட மாற்றங்கள் ஏற்படு கின்றன.

அத்துடன் இவை பழுது படாமல் இருப்பதற்காக இவற்றிற்குப் பல் வேறுபட்ட இரசாயனப் பதார்த்தங் கள் சேர்க்கப்படுகின்றன. இவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே இயற்கை அன்னையான உடன் உணவுகளை உண்பதில் ஆர்வத்தை வளர்த்து ஆரோக்கியம் பெறுவோம்.

Dr. சி. சிவசுதன் (பொது வைத்திய நிபுணர்)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link