புதைந்த தேர் வடத்தை தொய்யவிடாமல் இழுக்க வேண்டும்
Share
தமிழர்களின் வாழ்வில் தேர் என்பது மிகுந்த முதன்மை கொண்டது.
ஆலயத் திருவிழாக்களில் தேரில் இறை வனை ஆரோகணிக்க வைத்து, ஊர் கூடி வடம் இழுத்து மகிழ்வடைகின்ற தேர்த் திரு விழா திருவிழாக்களுக்கெல்லாம் தலை யானது.
தவிர, நம் தமிழ் மன்னர்கள் தேரில் பவனி வருவதை மன்னர்க்குரிய மாண்பாகக் கருதி னர்.
மனுநீதிச் சோழ மன்னனின் நீதி உலகெங் கும் பரவுவதற்கு தேரின் வகிபங்கு காத்திர மானது.
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி மன்னனின் ஈகையோடும் தேர் தொடர்புபட்டுள்ளது.
எங்கள் மண்ணில் நடந்த யுத்த அனர்த் தங்களில் செல்வச்சந்நிதித் தேர் எரியூட்டப் பட்ட நிகழ்வும் அதன் தாக்கமும் வரலாற்றோடு பதிவானவை.
இங்கு ஆலயங்களில் தேர் முதன்மை பெறுவதற்குக் காரணம், ஊர் கூடி வடம் பிடித்தால் மட்டுமே தேர் அசையும்.
ஆக, மிகப் பெரும் தேரை இழுக்க வேண்டு மாயின் அதற்கு ஊர் கூட வேண்டும். ஊர் கூடுதல் என்பது ஒற்றுமை இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
ஆக, மிகப்பெரும் தேரை இழுப்பதற்கு ஒற்றுமை அவசியம் என்பதாலும் தேர்த் திரு விழா சிறப்பும் முதன்மையும் பெறலாயிற்று.
இங்கு வடம் பிடித்து தேர் இழுத்தல் என் பது சாதாரணமான விடயமன்று.
தேரைத் திருப்புவதும் நேர்ப்படுத்துவதும் ஆசாரியரின் கையில் இருந்தாலும் தேர் இழுபட்டால் மட்டுமே சறுகுகட்டை வேலை செய்யும்.
இங்கு சிலவேளைகளில் தேர் புதைவது முண்டு. தேர் புதைந்தால் வடம் பிடிப்பவர்கள் உரமாகவும் தொடர்ச்சியாகவும் தேரை இழுக்க வேண்டும்.
இவ்விடத்தில் ஆசாரியர் இரண்டு கைக ளையும் உயர்த்தி அசைத்து தேரை இழுக்கு மாறு அடியவர்களுக்குக் கூறுவர்.
புதைந்த தேரை மீட்டெடுப்பதற்கான ஒரே வழி தேரை விடாமல் இழுப்பதாகும்
இங்குதான் புதைந்த தேரோடு எங்கள் இனப்பிரச்சினையும் தொடர்புபடுகிறது.
எங்கள் உரிமைத் தேர் புதைந்து கிடக்கிறது. அதனை மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாகத் தேரை இழுக்க வேண்டும்.
இதற்கு மேலாக, எங்களிடம் இருக்கக் கூடிய முழுப் பலத்தையும் பிரயோகித்து தொடர்ச் சியாகத் தேரை இழுத்தால் மட்டுமே புதைபட்ட எங்கள் உரிமைத் தேர் அசைந்து இருப்புக்கு வந்து சேரும்.