பார்த்தீபன் பெயரால் ஒற்றுமை மலர்ந்தது
Share
தியாகி திலீபன் உண்ணா நோன்பிருந்து தன்னுயிரை ஆகுதியாக்கிய நாள் இன்று.
பன்னிரெண்டு நாட்கள் உண்ணாநோன் பிருந்து உயிர்த்தியாகம் செய்த அந்த உத்த மனின் நாமம் இறப்பின்றி வாழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அதேவேளை உயிர்வாழும் மனிதர்களுக்கு மட்டுமே இயலுமை உண்டென்று எவரும் நினைத்து விடக்கூடாது.
மாறாக, புனித ஆத்மாக்கள் மிகப்பெரும் பலம் கொண்டவை என்பது ஏற்புடைய உண்மை.
அந்த வகையில் தியாகி திலீபனின் புனித ஆத்மா மிகப்பெரும் பலத்தைக் கொண்டுள்ள தென்பதற்கு தக்க சான்று உள்ளது.
ஆம், தன்னுயிரை ஆகுதியாக்கி அகிம்சை யின் அடையாளமாகத் திகழும் தியாகி திலீ பனை நினைவேந்த முடியாத சூழமைவு இப் போது ஏற்பட்டுள்ளது.
இஃது பலருக்கும் மிகுந்த வேதனையைக் கொடுத்திருக்கலாம்.
ஆனால் தியாகி திலீபனின் ஆத்ம பலம் தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய நன் மையை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது, தியாகி திலீபனை நினைவேந்த முடியாத சூழ்நிலையில் தமிழ் அரசியல் கட்சி கள் ஒன்றுபடுகின்றன.
தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுபடுத்து வது நடவாத காரியம் என்றிருந்த ஒரு பெரும் நிலைமை சர்வசாதாரணமான விடயமாகிவிடு கிறது.
தியாகி திலீபனின் நினைவேந்தல் காலத் தில் தமிழ் அரசியல் கட்சிகள் பேதங்களை மறந்து ஒன்றுபட்டுள்ளன.
இந்த ஒற்றுமை ஒரு பெரும் தியாகத்தின் பலத்தால் விளைந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது.
இன்று நினைவேந்த முடியவில்லை என் றால் நாளை. நாளையும் முடியவில்லை என் றால் மறுநாள். அதுவும் முடியவில்லை என் றால் என்றோ ஒருநாள்.
அந்த நாள் சாத்தியமாக வேண்டுமாயின், தமிழ் மக்களிடம் – தமிழ் அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமை அவசியம்.
நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டு விட்டால் அந்தப் பிரவாகத்தைத் தடுக்க யாரால் முடியும்.
அந்தப் பிரவாகத்தை தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடை தந்த தெனில், அஃது தியாகி திலீபனின் ஆத்ம பலமன்றி வேறு எதுவெனக் கூற முடியும்.
எனவே எங்கள் ஒன்றுமை வலுக்கட்டும். எதிலும் ஒன்றுபட்டு ஓரணியாய் நிற்போம். அதுவே பார்த்தீபனுக்கு நாம் செய்யும் நினை வேந்தா நினைவேந்தல்.