பாடசாலைகளை ஆரம்பித்தால்; மாணவர்கள் பக்குவம்
Share
கொரோனாத் தொற்றின் அபாய கட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து செல்கின்றது.
கொரோனா காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
எனினும் அந்தந்த மாகாணங்களில் எடுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கொரோ னாத் தொற்று பிரகண்டம் அடையாமல் தடுக்கப்பட்டு வருகிறது.
இருந்தும் கொரோனாத் தொற்றுடன் வாழப் பழகுவது தவிர்க்க முடியாது என்ற தீர் மானத்தை எடுத்துள்ள அரசாங்கம்,கொரோனாவைத் திறந்த சந்தைக்கு விட முடிவு செய்துள்ளதுபோல் தெரிகிறது.
இதன் ஒரு கட்டமே எதிர்வரும் 23ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது என்ற அறிவிப்பாகும்.
பாடசாலைகளை ஆரம்பிப்பது என முடிவு செய்யும்போது, மாணவர்களுக்கான போக்கு வரத்து சேவையில் தனி நபர் இடைவெளியைப் பேண முடியாத சூழ்நிலை ஏற்படும்.
இதற்கு மேலாக, அதிக மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளாலும் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்படுவதும் தவிர்க்க முடியாததே.
இத்தகையதொரு சூழமைவில் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன.
மத்திய கல்வி அமைச்சின் அறிவிப்பைப் பார்க்கும்போது, பாடசாலை அதிபரின் தலை யில் பெரும் சுமை ஏற்றப்படுவது தெரிகிறது.
பாடசாலைகள் தொடர்ந்து இயங்காமல் இருக்கும்போது, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.
அதேநேரம் கொரோனாத் தொற்று சமூகத்தில் வேகமாகப் பரவி இருக்கும்போது பாட சாலைகளை ஆரம்பிப்பது நனைத்துச் சுமப்பதாக ஆகிவிடுமோ என்ற ஏக்கத்தைத் தரவே செய்யும்.
குறிப்பாக இரண்டாயிரம் மாணவர்களைக் கொண்ட பாடசாலை ஒன்றில் ஒரு மாண வனுக்கு கொரோனாத் தொற்று இனங்காணப்பட்டால்,அதன் விளைவு என்ன என்பது பற்றிச் சிந்திப்பது கட்டாயமானதாகும்.
எனினும் இதுபற்றிய எண்ணப்பாடுகள் அரசாங்கத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை.
அடுத்துவரும் மூன்று ஆண்டுகளுக்கு கொரோனாத் தொற்றுடன் வாழ வேண்டி யிருக்கும். இதற்கு மக்கள் தங்களைப் பழக் கப்படுத்திக் கொள்வதுதான் ஒரே வழி என்பது சுகாதார அமைச்சின் முடிந்த முடிவு.
ஆக, பாடசாலைகள் ஆரம்பமாகிய நிலை யில் மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டால், அதனை ஏற்றுக் கொண்டு வாழப் பழகுதல் என்ற முடிவுக்கு அரசாங்கம் வந்துவிட்ட பின்னர், எவரும் எதுவும் செய்ய முடியாது.
எனினும் பாடசாலைகள் ஆரம்பமாகும் போது, மாணவர்களைப் பாதுகாப்பது என்ற விடயத்தில் அதீத கவனம் செலுத்துவது ஒவ்வொருவரதும் தலையாய கடமையாகும்.
ஆகவே கொரோனாத் தொற்றைத் தடுப் பதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் பாட சாலைகள் நூறு வீதம் பின்பற்ற வேண்டும் என்பதுதான் இங்கு வலியுறுத்தப்பட வேண் டிய முக்கிய விடயமாகும்.