பனைகள் இல்லாதவிடத்து வடலிகளே பனைகளாம்
Share
தமிழ் மொழியின் சிறப்பு அம்மொழியில் இருக்கக்கூடிய சொற்களஞ்சியமாகும்.
தவிர, எதனையும் பிரித்தறியும் வகையிலும் தமிழ்ச் சொற்கள் படைக்கப்பட்டுள்ளன.
உதாரணத்துக்கு பிறப்பு என்ற விடயத்தை எடுத்துக் கொண்டால், முருகன் உதித்தான். ஞானசம்பந்தர் அவதரித்தார். காந்தியடிகள் தோன்றினார் என்றவாறு அவரவர் மாண்பின் பொருட்டு அவர் தம் பிறப்பை தமிழ் உணர்த்தி நிற்கிறது.
இஃது ஒரு வகை என்றால், சாமானியர் கள் பிறந்தனர் என்பதாகத் தமிழின் சொல் வழமைப்படுத்துகிறது.
இங்கு பிறந்தவர் என அழைக்கப்பட்ட ஒருவரை; தோன்றினார் என அழைப்பதற்குள், அவரின் மாண்பான வாழ்வும் பண்பான கருமங்களும் உச்சம் பெற்றுள்ளன என்பது உணர் தற்குரியது.
இதுபோல இளமைப் பெயர்கள், முதுமைப் பெயர்கள் என்றவாறான பேதப்படுத்தல்களும் தமிழில் தாராளம் உண்டு.
பனையை எடுத்துக் கொண்டால் பனையின் முளைப்பருவம் பீலி என்றும் அதன் இளமைப்பருவம் வடலி என்றும் முதுபருவம் பனை என்றும் அழைக்கப்படுகின்றன.
இங்கு வடலிகளே பனைகளாகுகின்றன வெனினும் வடலியைப் பனை என்று அழைப் பதோ அன்றி பனையை வடலி என்று கூறு வதோ ஏற்புடையதாகாது.
ஆக, வடலிப் பருவம் என்பது அதற்குரிய குணம் குறிகளைக் கொண்டதாகும். வடலி களில் கருக்கு நிறைந்த மட்டைகள்; இறுக்க மான பிடிமானங்கள்; காவோலைகளின் தடிப்பும் விட்டுக் கொடுக்காத வைராக்கியங்களும் என அனைத்தும் ஒன்று திரண்டதாகவே வடலிகள் காணப்படும்.
ஆனால் பனைப் பருவம் அதுவன்று. கருக் கில் மென்மை, இறுக்கமான பிடிமானமின்மை, பழுத்த ஓலைகளைப் பக்குவமாக நிலத்துக்கு அனுப்பி வைத்து மக்களுக்கு உதவுகின்ற பெருந்தன்மை.
நுங்கு, பனம் பழம், பதநீர் எனத் தன் தலையால் தருகின்ற தருமம் என ஏகப்பட்ட சாந் தங்களும் கொடைகளும் பனைகளில் உண்டு.
இங்கு முற்று முழுதாகப் பனைகள் இல்லாத விடத்து, வடலிகளைப் பனைகள் என்று காட்டு கின்ற துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படுகிறது.
இந்த நிலைமை பனைகளுக்கு மட்டுமல்ல. மனிதர்களுக்கும் ஏற்புடையதுதான். பண் பான, தருமம் நிறைந்த மானிடர்கள் இல்லாத விடத்து, அதிகாரமும் அதட்டலும் விட்டுக் கொடுக்காத மனநிலையும் வஞ்சம் தீர்க்கும் எண்ணங்களும் உடையவர்களே மனிதர் ஆகுவர்.
இந்த நிலைçமைகளே இன்றைய அத் தனை அவலங்களுக்கும் அடிப்படையாகும்.
என்ன செய்வது பனைகள் இல்லாத விடத்து வடலிகளுக்குப் பனைகளைத் தெரிய நியாயம் இல்லை என்பதும் ஏற்புடையதுதான்.