படையினருக்கு கொரோனா என்றால் பணியில் ஈடுபடுவது பொருத்தமா?
Share
நாட்டில் கொரோனாத் தொற்றைக் கட்டுப் படுத்துவதில் களமிறக்கப்பட்ட படைத்தரப்பின ருக்கு கொரோனாத் தொற்றுப் பரவத் தொடங்கியுள்ளமை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் படையினர் களமிறக்கப்பட்டபோது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இருப்பினும் படையினரை ஈடுபடுத்தியமை ஏற்றுக் கொள்ளக் கூடியது என்ற கருத்து நிலை கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்த போது உருவாகியது.
எனினும் தற்போது படையினருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டு விட்டது என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாத் தொற்றை பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டபடையினருக்கு கொரோனாத் தொற்றில் இருந்து தம்மைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் சீருடை தரித்து, ஆயுதமும் வைத் திருந்தால் கொரோனா கிருமி தொற்றாது என்ற நினைப்பில் படைத்தரப்பின் தலைமை நடந்து கொண்டதோ என்று எண்ணுமளவுக்கு நிலைமை வந்துவிட்டது.
எதுஎவ்வாறாயினும் படைத்தரப்பில் ஒரு வருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டால் கூட அதன் பரவுகை எல்லை மீறியதாகவே இருக்கும்.
படைமுகாம்களில் இருக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை, அவர்கள் வெளியில் நடமாடு கின்ற நிலைமைகள் என்பன தொற்று வேகத்தை அதிகரிக்கக் காரணமாகிறது.
நிலைமை இதுவாக இருக்கையில், கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதிலும் ஊரடங்குச் வேளைகளில் பயணிப்பவர்களின் அனுமதி அட்டைகளைப் பார்வையிடுவதிலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோரை சோதிப்பதிலும் சில ஒழுங்குபடுத்தல்களைச் செய்வதிலும் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், படையினரிடம் இருந்து பொதுமக் களுக்கு கொரோனாத் தொற்றுப் பரவுகின்ற சந்தர்ப்பங்கள், சாத்தியங்கள் இருக்குமாயின் அத்தகையதொரு சூழ்நிலையை இலங்கையால் தாங்கிக் கொள்ள முடியாமலே இருக் கும்.
எனவே கொரோனாத் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்கின்ற பணியில் ஈடுபட்டு, அடையாள அட்டைகளை வாங்கிப் பார்வையிட்ட பின் உரியவரிடம் ஒப்படைக்கின்ற படையினர்; கொரோனாத் தொற்றுக்கு ஆளாக வில்லை என்பது உறுதிப்படுத்தப்படுவது மிகவும் கட்டாயமானது.
ஆகவே இது விடயத்தில் சாத்தியமான நட வடிக்கைகளை எடுப்பது அரசினதும் சுகா தாரப் பிரிவினதும் தலையாய கடமையாகும்.