தலைவன் பிறக்கின்றானா? உருவாக்கப்படுகின்றானா?
Share
தலைமைத்துவம் என்பதற்கான வரை விலக்கணத்தை முகாமைத்துவவியலாளர்கள் வகுத்துள்ளனராயினும் தலைமைத்துவம், தலைவன் என்ற சொற்பதங்களை எவரும் வரைவிலக்கணப்படுத்திவிட முடியாதென்பது நம் தாழ்மையான கருத்து.
அதாவது தலைவன், தலைமைத்துவம் என்பதற்கான சில எடுகோள்களை, செயற் றிறன்களை வரைவிலக்கணத்தோடு முன் வைக்கலாமேயன்றி, கொடுக்கப்பட்ட வரை விலக்கணத்தை தாண்டி மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடத்தைப் பெற்ற தலைவர் களும் உளர் என்பது இங்கு ஈண்டு கவனிக்கத்தக்கது.
ஒரு காலத்தில் தலைவர்கள் பிறக்கின் றார்கள் என்ற கருத்து நிலை இருந்தது.
ஆயினும் சமகாலத்தில் தலைவர்கள் உரு வாக்கப்படுகின்றனர் என்ற கருத்தியல் முன் னெழுந்துள்ளது.
ஆனால் உண்மைகளின் அடிப்படையிலும் யதார்த்த சிந்தனையிலும் நோக்கும்போது தலைவர்கள் பிறக்கின்றார்கள் என்பதே ஏற்புடையதென்பது நம் முடிவு.
இதை நாம் கூறுவதற்கு நியாயபூர்வமான ஆதாரங்களும் உதாரணங்களும் உடையன வாயினும் அவற்றை விரிவுபடுத்துவது இவ் விடத்துக்கு உகந்ததல்ல என்பதால் அதனை அப்படியே விட்டுவிடலாம்.
தவிர, தலைவன் என்ற பதவியில் அல்லது தலைமைத்துவத்துக்குக் கொடுக்கப்பட்ட வரைவிலக்கணத்தின் இயல்புகளைக் கொண்ட வர்கள் பலர் இருந்துள்ளனராயினும் அவர் களால் மக்கள் மனங்களை வெல்ல முடிய வில்லை என்பதுதான் இங்கு விசேடமான விடயம்.
ஆக, தலைவன் என்பவன் மக்களின் இத யங்களில் வாழ்பவன். மக்கள் தங்கள் இத யங்களில் ஏற்றிய தவைனை ஒருபோதும் மறப்பதில்லை.
அந்தத் தலைவனின் மகிமைக்கு யார் பங்கம் விளைவிக்க முற்பட்டாலும் அத்தகை யவர்களை மக்கள் தூக்கி எறிந்து விடுவர்.
அந்தளவுக்கு தலைவன் மீது கொண்ட பற்றும் பாசமும் உச்சமாய் உயர்ந்து நிற்கும்.
இவ்வாறு மக்கள் மனங்களில் இடம் பிடித்த தலைவர்கள் எத்தனை பேர் என்று கணக்கிடும்போது, விரல்விட்டு எண்ணக் கூடிய தலைவர்களே மக்கள் தலைவர்களாக இருந்துள்ளனர் என்பது தெரியவரும்.
அப்படியானால், தலைவர்கள் பிறக்கின்றார்கள் என்பதை எங்ஙனம் நிராகரிக்க முடியும்.
ஆம், உண்மையான தலைவனின் வீரத்தை, ஒழுக்கத்தை, தியாகத்தை எதிரியும் போற்று வான். அந்தப் போற்றுதல் நடந்துள்ளதெனில் அந்தத் தலைவன்; தான் சார்ந்த மக்களின் இதயங்களில் எங்ஙனம் இடம் பிடித்திருப் பான் என்பதை யாம் சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.