Type to search

Editorial

தமிழ் மக்களுக்கான அரசியல் கட்ட மைப்பை பலப்படுத்தினால் என்ன?

Share

நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு எதிராக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளமை கண்டு தமிழ் மக்கள் திருப்தியடைந்துள்ளனர்.

வழக்கை வாபஸ் பெறுவதாக டெனீஸ்வரன் நீதிமன்றில் அறிவித்தமை காலம் உணர்ந்து அவர் செய்த கைங்கரியம் என்பதை இங்கு கூறித்தானாக வேண்டும்.

எமக்குள் ஆயிரம் பிரச்சினைகள், பிடுங் குப்பாடுகள் இருக்கலாம். ஆனால் நாம் தமிழர் எனும்போது பகைமை மறந்து ஒற்றுமைப் படுவது மிகவும் கட்டாயமானது.

அந்த வகையில் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் – டெனீஸ்வரன் ஆகியோர் தமக் கிடையே இருந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொண்டு இருவரும் கைலாகு கொடுத் தமை எங்களை எவராலும் பிரிக்க முடியாது. நாம் உறுதியாக இருக்கின்றோம் என்பதை நிலைநாட்டுவதாக அமைகிறது.

தவிர, பிரஸ்தாப வழக்குத் தொடர்பில் சம் பந்தப்பட்ட இருவரும் தெரிவித்த கருத்துக் களும் வரவேற்கப்பட வேண்டியவை.

இவை ஒருபுறமிருக்க; ஈழத் தமிழினத்தின் வரலாற்றை, அவர்களுக்கு இந்த நாட்டில் இருக்கக்கூடிய உரிமையை, இந்த நாட்டின் ஆதிக்குடிகள் யார் என்ற உண்மையையயல் லாம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பாராளு மன்றத்தில் விலாவாரியாக எடுத்துக் கூறி வருகிறார்.

இஃது பேரினவாதிகளுக்குக் கடுப்பை ஏற்படுத்தியிருந்தாலும் அவர்களைப் பார்த்து இந்த நாட்டின் ஆதிக்குடிகள் யார் என்பதை ஆய்வு செய்வதற்கு குழுவை அமைத்து அறியுங்கள் என நீதியரசர் விக்னேஸ்வரன் கொடுத்த பதில் சிங்களக் கடும்போக்காளர் களின் வாய்க்கொழுப்பைக் கரைத்துள்ளது.

நிலைமை இதுவாக இருக்க, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராகத் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெறவேண்டுமென உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் நம்மவர்கள் டெனீஸ்வரனுடன் கதைத் திருந்தனர்.

அதிலும் குறிப்பாக நம் சட்டத்தரணிகள் இது விடயத்தில் தளராது செயற்பட்டனர். அதனால் எம் இனத்தை மற்றவர்கள் விமர்சிக்கின்ற சூழமைவு இல்லாமல் ஆக்கப்பட் டது.

இங்குதான் நாம் கேட்பது, இந்தச் சந்தர்ப் பத்தோடு ஒரு பலமான தமிழ் அரசியல் கட்ட மைப்பை நாம் உருவாக்கினால் என்ன?

பகைமை மறந்து, பதவி ஆசை துறந்து, தமிழினத்துக்காக நாம் அனைவரும் ஒன்று பட்டு ஒரு பலமான அரசியல் கட்டமைப்பை உருவாக்கினால் நாம் சாதிக்கக் கூடியவை ஏராளம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link