Type to search

Editorial

தமிழ் மக்களின் அவலத்தை முழுமையாக அறிந்த ஆட்சி யாளர்கள்

Share

வன்னிப் பெருநிலப்பரப்பில் கொடும் போர் நடந்தபோது மகிந்த ராஜபக்­ ஜனாதிபதி. அவரே பாதுகாப்பு அமைச்சரும். கோட்டாபய ராஜபக்­ பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்.
யுத்தம் முடிவுற்று பத்து ஆண்டுகள் கடந்து விட்டன.

இப்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்­, பாதுகாப்பு அமைச்சும் அவரிடமே உண்டு. மகிந்த ராஜபக்­ பிரதமராக உள்ளார்.

இங்கு இயற்கை ஓர் அரியவாய்ப்பை சிங்கள மக்களுக்கும் சிங்களத் தரப்பினருக்கும் வழங்கியுள்ளது.

அதாவது வன்னிப் பெருநிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப் பட்ட அந்த யுத்தத்தை நடத்திய ஆட்சிப்பீடம் மீண்டும் அரண்மனை ஏறியுள்ளது.

வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த யுத்தத் தின்போது அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப் பட்டமை, யுத்த காலத்தில் தமிழ் மக்கள் பட்ட அவலங்கள், படைத்தரப்பினரிடம் தங்கள் குடும்ப உறவுகளை ஒப்படைத்துவிட்டு அவர்களைக் காணாமல் கண்ணீரும் கம்பலையு மாக வாழ்கின்ற மக்கள் என்ற பட்டியலும் யுத்தத்தின் கொடுமையால் பெற்றோர்களை இழந்து யாருமற்ற அநாதைகளாகக் காப்பகங்களில் வாழுகின்றசிறார்கள், பிள்ளைகளை இழந்து தவிக்கின்ற பெற்றோர்கள் என ஏகப்பட்ட துன்பங்களும் அவலங்களும் நீண்டு செல்கின்றன.

இதை நன்கு அறியக்கூடியவர்கள் அன்றைய ஆட்சிப்பீடத்தினரும் படைத்தரப்பினரும் என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.

இந்நிலையில் தற்போதிருக்கின்ற ஆட்சி யாளர்கள் போர் வெற்றியால் இறுமாப்பு அடையலாம்.

ஆனால் கொடும் யுத்தத்தின்போது எங் களைக் காப்பாற்றுங்கள் என்று உயிருக் காகக் கையேந்திய மக்களுக்கு வழங்கப்பட்ட நீதி என்ன என்பதையயல்லாம் அதனோடு சம் பந்தப்பட்டவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். மறக்கவும் முடியாது.

ஏனெனில் அந்தக் காட்சியின் கொடும் நினைவுகள் நிச்சயம் சம்பந்தப்பட்டவர்களை உறுத்திக் கொண்டே இருக்கும்.

ஆம், குற்றுயிராய்க் கிடந்து மண்ணில் புரண்டு உயிர்விட்ட அந்த நிட்டூரங்களை மறந்து வாழலாம் என்று எவர் நினைத்தாலும் அது வெறுங்கதையன்றி வேறில்லை.

எனவே, தன் நெஞ்சு தன்னைச் சுடும்போது வெற்றி என்ற கோசத்தைக் கடந்து மன நிம்மதி இழந்து போகும்.

ஆகையால் தற்போது ஆட்சிப்பீடத்தில் இருப்பவர்கள் கழுவாய் தீர்க்க வேண்டும்.
அதற்கான ஒரேவழி, தமிழ் மக்களுக்கான உரிமையை தாமே முன் வந்து வழங்கி வைப்பதுதான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link