காலம் என்பது தெய்வத்தால் இசைக்கப்படும் இராகம்
Share
காலம் என்ற தமிழ்ச் சொல் மிகப் பெறுமதியானது மட்டுமன்றி, அனைத்துத் தமிழ் மக் களாலும் உச்சரிக்கப்படுகின்ற ஆற்றுகைச் சொல் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தவிர, காலம் என்பது பலபொருள் தரக் கூடிய ஒரு சொல் என்பதும் இங்கு கவனிக் கப்பட வேண்டியது.
அந்த வகையில், எமது வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் குறித்து எல்லாம் காலம் என்று கூறிக் கொள்கின்றோம்.
இஃது எழுதப்பட்ட விதிகளின் ஒழுங்க மைப்பைக் குறித்து நிற்கும்.
தவிர, சந்தர்ப்ப சூழல்களின் சாதக பாதகத் தன்மைகளும் காலம் என்ற பொருளை உணர்த்தி நிற்கிறது.
அடுத்தடுத்துத் துன்பம் ஏற்படுகின்றபோது கெடு காலம் என்று கூறி மனம் நொந்து கொள்கிறோம்.
அதேபோல, நன்மையும் வெற்றியும் சேரும்போது காலம் வேலை செய்கிறது என்று காரணம் சொல்கிறோம்.
இவ்வாறு சொல்லப்படுகின்ற காலத்துக் குள் காலனும் அடங்கிக் கொள்கின்றான்.
ஆக, விதிப்பயன் என்பதையும் காலமே தீர்மானிக்கிறது.
இவ்வாறு காலத்தை குறித்துரைத்த நம்ம வர்கள் என்ன செய்வது எல்லாம் காலம் செய்த கோலம் என்று கூறி ஆற்றுப்படுத்து வதற்கும் காலம் என்ற சொல்லைக் கையாள் கின்றனர்.
இவ்வாறு காலத்துக்கு விளக்கம் தந்த தமிழ், காலத்தின் பெறுமதியை உணர்த் துவதற்காக;
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என் றும் நேரம் பொன்னானது என்றும் ஆகுங் காலத்தே அவை அவை ஆகும். போகும் காலத்தே பொன்பொருள் எல்லாம் போகும் என்றும் விளக்கம் தந்து காலத்தின் அருமையைப் புகட்டினர்.
ஆக, ஒட்டுமொத்தத்தில் தமிழில் இருக்கக் கூடிய சொற்களில் காலம் என்பதற்கான முதன்மையும் முக்கியத்துவமும் மிக உயர் வானது என்பது இப்போது ஏற்கப்படக்கூடிய தாக இருக்கும்.
இவ்வாறு தமிழில் இருக்கக்கூடிய காலம் என்பதை கவிஞர் கண்ணதாசன் தெய்வத் தால் இசைக்கப்படும் இராகம் என்றார்.
ஆம், அர்த்தமுள்ள இந்து மதத்தில் காலம் என்பது தெய்வத்தால் இசைக்கப்படும் இரா கம் எனக் கவியரசர் கண்ணதாசன் குறித்து நிற்பதற்குள் நிறைந்த அர்த்தங்கள் புரியப்படு கின்றன.
இராகம் என்பது காற்றோடு கலந்து அண்ட வெளியில் சங்கமமாவது. இசைக்கப்படும் இரா கத்தை நிறுத்தி வைப்பது முடியாத காரியம்.
இராகத்தை நிறுத்தி வைப்பதென்றால், அது நிசப்தமான சூழமைவையே குறிக்கும்.
அதிலும் தெய்வத்தால் இசைக்கப்படும் இராகத்தை நிறுத்துவது சாத்தியமற்றது.
எனவே காலம் நமக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பம். அதனைப் பயன்படுத்திக் கொள் வதில்தான் எல்லாம் தங்கியுள்ளது.
ஆகவே, எங்கள் தமிழ் அரசியல் தரப்புகள் காலத்தைப் பயன்படுத்தத் தயாராக வேண்டும்.
காலத்தைக் கடத்திவிட்டு, அழுது புலம்பு வதால் ஆகப்போவது எதுவுமில்லை.