காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஜனாதிபதியும் பிரதமரும் சந்திக்க வேண்டும்
Share
தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் இருந்து ராஜபக்க்கள் விலக முடியாது என வாசுதேவ நாணயக்கார அண்மையில் கூறியிருந்தார்.
வாசுதேவ நாணயக்காரவா இவ்வாறு கூறினார் என்று ஐயம் கொண்டாலும் பழைய வாசுதேவ நாணயக்கார மீது தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய நன்மதிப்பும் நம்பிக் கையும் அவர் இவ்வாறு கூறியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
தவிர, வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த யுத்தமும் அதன் காரணமாகத் தமிழ் மக் களுக்கு ஏற்பட்ட உயிர் இழப்புகளும் சொத்தழிவுகளும் அங்கவீனங்களுக்கும் பதிலளிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு மகிந்தராஜபக் தரப்புக்கு உண்டு என்பது ஏற்புடைய நியா யம்.
ஏனெனில் வன்னி யுத்தத்தை முன்னெடுத்த ஆட்சியாளர்கள் இவர்கள் என்பதால், எந்தச் சந்தர்ப்பத்திலும் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களாக ராஜபக் தரப்பினர் இருக்கின்றனர் என்பதில் மாற்றுக் கருத்திற் கிடமில்லை.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, பொறுப்புக்கூற வேண்டியவரை அதிகாரக் கதிரையில் இருத்துங்கள். அப்போதுதான் பொறுப்புக் கூறுவதை வலியுறுத்த முடியுமென; இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் கூறியிருந்த கருத்தின் மீது கவனம் செலுத்தலாம்.
வரதராஜப்பெருமாள் கூறிய கருத்தின் சரி பிழைக்கு அப்பால், பொறுப்புக் கூற வேண்டிய வர்கள் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து விட்டனர்.
எனவே அவர்கள் தங்களின் கடமையைச் செய்தாக வேண்டும். அந்தக் கடமையைத் தான் வாசுதேவ நாணயக்கார அவர்கள் தத்துவ உபதேசமாகக் கூறியிருக்கின்றார்.
இவற்றுக்கு மேலாக, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அதை எங்கள் அரசாங்கம் செய்யும் என்பதை பிரதமர் மகிந்த ராஜபக் அண்மையிலும் கூறியிருந்தார்.
எனினும் அவரோடு இருக்கக்கூடிய பேரின வாதிகள், தமிழ் மக்கள் தொடர்பில் தெரிவிக் கின்ற கருத்துக்கள் தமிழ் மக்களுக்குத் தீர்வு எதனையும் வழங்கக்கூடாது எனக் கருத்துரு வாக்கம் செய்வதான நிலைமைகளும் உண்டு.
எது எவ்வாறாயினும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை இந்த நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் சந்தித்தாக வேண்டும்.
இந்தச் சந்திப்பு மனித உயிர்களின் பெறுமதியையும் தங்களின் பிள்ளைகளைக் காணா மல் அவர் தம் பெற்றோர்படும் வேதனைகளையும் நேரில் காணும்போது, ஆட்சித் தலைவர்களிடம் மனமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு நிறையவே உண்டு.
ஆகையால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜனாதிபதியும் பிரதமரும் சந்திப்பதற்கான சூழமைவு ஏற்படுத்தப்பட வேண்டும்.