கட்சியையும் கந்தறுத்து பதவியையும் துறந்த கதை
Share
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவியை துரைராஜசிங்கம் இராஜினாமாச் செய்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்ததன் பிற்பாடு, அந்தக் கட்சிக்குள் அக முரண்பாடுகள் வலுத்துக் கொண்டன.
இந்த அக முரண்பாட்டை ஏற்படுத்தியதில் துரைராஜசிங்கத்துக்குப் பெரும் பங்குண்டு.
ஆம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்கு வதில் துரைராஜசிங்கம் தன்னிச்சையாகச் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டு கட்சிக்குள் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்குக் கூடத் தெரியப்படுத்தா மல் தன்பாட்டில், தேசியப் பட்டியலில் கிடைத்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தான் விரும்பிய ஒருவருக்கு; செயலாளர் என்ற அதிகாரத்தின் கீழ் துரைராஜசிங்கம் வழங்கி யிருந்தார்.
இதன் காரணமாக அவருக்கு எதிராகக் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்தபோது அவர் தனது செயலாளர் பதவியை இராஜினாமச் செய்ய வேண்டியதாயிற்று.
இதில் அவதானிக்கப்பட வேண்டியது என்ன வெனில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்கள் பேரவை கிழக்கு மாகாணத்தில் முத்தமிழ் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களை ஒன்றுபடுத்துவது, வடக்கு – கிழக்கு தமிழ் உறவைக் கட்டியயழுப்புவது என்ற நோக்கில் தமிழ் மக்கள் பேரவை குறித்த முத்தமிழ் விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
எனினும் அந்த முத்தமிழ் விழாவுக்கு விருந்தினர்கள், பொதுமக்கள் செல்லக் கூடாது என துரைராஜசிங்கம் பெரும் பிரசாரம் செய்து தடுத்தார்.
தவிர, முத்தமிழ் விழாவுக்குப் பங்காற்றிய கிழக்கு மாகாணத்து அரச உத்தியோகத்தர் களுக்கு அப்போதிருந்த மாகாண சபை அர சாங்கத்தினூடாக இடமாற்றத்தையும் வழங்கி யிருந்தார்.
உண்மையில், கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் பல்வேறு அவலங்களையும் அழுத் தங்களையும் சந்தித்து வருகின்றனர்.
கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. இந்நிலை யில் கிழக்கு மாகாண மக்களை அணிதிரட்டு வதில் பங்காற்ற வேண்டிய துரைராஜசிங்கம் தனது சொந்த அரசியல் நலனுக்காக, தமிழ் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுவதைத் தடுத்தார்.
அதே மன இயல்போடு நடந்து கொண்ட அவர், இப்போது தமிழரசுக் கட்சிக்கும் ஈனத்தைத் தேடியுள்ளார்.
எனினும் காலம் கடந்தேனும் அவருக்கு இயற்கை பாடம் புகட்டியுள்ளது.