அண்டை நாட்டில் ஆபத்து அவதானம் மிகத் தேவை
Share
இந்திய தேசத்தில் கொரோனாத் தொற்று நோய் உருத்திர தாண்டவம் ஆடுவது கண்டு மனம் நொந்து போயுள்ளோம்.
இந்திய தேசத்தில் வேகமாகப் பரவிவரும் கொரோனாத் தொற்றில் இருந்து பாரத மக் களைக் காப்பாற்ற வேண்டுமென நாம் அனைவரும் ஆன்மிக தியானம் செய்ய வேண்டும்.
இவை ஒருபுறமிருக்க, அகண்ட இந்திய தேசம் என்பதற்குள் இலங்கையும் உட்பட்ட தாகவே நாம் நோக்க வேண்டும்.
இந்திய தேசத்தின் கலை, கலாசார பண்பாட்டு விழுமியம், ஆன்மிகம் என்பன எங்ஙனம் எங்கள் மண்ணில் வேரூன்றினவோ அதுபோல இந்தியாவில் காலத்துக்குக் காலம் ஏற்பட்ட நோய் அனர்த்தங்களும் எங்கள் நாட்டை விட்டுவைக்கவில்லை.
அந்தளவுக்கு இந்தியாவும் இலங்கையும் ஏதோவொரு வகையில் நெருக்கமான தொடர் பைக் கொண்டுள்ளன.
ஒரு காலத்தில் பசுந்தீவு என்றழைக்கப்பட்ட நெடுந்தீவில் இருந்து பசும்பால் இராமேஸ் வரத்துக்குப் படகுகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதான உண்மைக் கதைகள் உண்டு.
தவிர, இந்திய கடற்றொழிலாளர்களும் ஈழத்துக் கடற்றொழிலாளர்களும் கடல் எல்லை களில் சந்திப்பதும் உரையாடுவதும் சர்வசாதா ரணமான விடயங்கள்.
இதற்கு மேலாக, நம் நாட்டை ஆட்டிப்படைக் கும் போதைவஸ்து விவகாரத்தில் இலங்கை இந்திய போதைவஸ்து வர்த்தகர்களிடையே கடலிடைத் தொடர்புகள் இருப்பதான தகவல்களும் உள்ளன.
இந்நிலையில் இந்தியாவை ஆட்டிப் படைக்கும் கொரோனாத் தொற்று; எங்கள் வடபுலத் துக்கு வரக்கூடிய ஆபத்துக்கள் உண்டென் பதை சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இலங்கையில் இரண்டாவது அலையாக இந்தியாவில் இருந்து கொரோனத் தொற்று ஏற்படலாம் என்ற எச்சரிக்கையை நாம் எவரும் உதாசீனம் செய்து விடக்கூடாது.
மாறாக, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து எங்களைப் பாதுகாக்கின்ற நடவடிக்கை களை முன்னெடுப்பதே இங்கு சாலப் பொருத்த மான விடயமாகும்.
அதேநேரம் இந்தியாவில் இருந்து கொரோனாத் தொற்று இலங்கைக்கு அதிலும் குறிப் பாக வடபுலத்துக்கு வருவதைத் தடுப்பதாக இருந்தால் கடற்படை, நம் கடற்றொழிலாளர் கள், கடல் சூழ் பிரதேசத்து மக்கள், சுகாதாரத்துறை என்ற தரப்பினரின் பூரண ஒத்துழைப்புத் தேவையாக இருக்கும்.
எதற்கும் அண்டை நாடான இந்தியாவிலிருந்து கொரோனாத் தொற்று இங்கு பரவலாம் என்ற ஆபத்தை எவரும் மறவாதிருக்க வேண்டும்.